உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 137வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும அமைதிக்கான நிறுவனம் உலகின் அமைதியான நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
தீவிரவாத அமைப்புகளின் வன்முறையால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும் , டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 152 வது இடத்தையும். ஆப்கானிஸ்தான் 162 வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80 வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply