கரூர், ஜூன் 18 –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம் தமிழ்நாடு காகித ஆலையில் (டிஎன்பிஎல்) அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம்பணி ஓய்வு பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக்குழு சார்பில் இவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கட்சியின் புகளூர் ஒன்றியக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சி நிதியாக ரூபாய் 1 லட்சத்தை தனது ஓய்வு நிதியிலிருந்து ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம் வழங்கினார்.

விழாவிற்கு கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். தீக்கதிர் நாளிதழின் ஆசிரியரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் இராமலிங்கம் தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூபாய் 1 லட்சத்தை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கே.துரைராஜ், மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, தீக்கதிர் நாளிதழின் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம் ஏற்புரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சண்முகசுந்தரம், என்.ராஜூ, ஜெ.அன்னகாமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.