பூ ஒன்று புயலானது!
=================

நல்ல சட்டை எடுக்கனும்
நல்ல பேண்ட் வாங்கனும்
மிடுக்கான சுடிதார் வாங்கி
மிட்டாய்க்கலர் மிடி மாட்டி
காதல் பூந்தோட்டத்தில்
கட்டியவனோடு வலம் வரும்
கலர்க்கலரான கனவுகள்!

அந்தக்கனவு பூத்தநாளில் தான்
கொடுவாளை வீசி வெட்டி
பூத்துக்குலுங்கிய அந்தப்
பூந்தோட்டத்தை சிதைத்தீர்கள்
மனம் வீசிய மலரொன்றை
வாள் கொண்டு பறித்தீர்கள்

ஆண்டு ஒன்றுதான் கடந்தது
ஆனால் அதிசயம் ஒன்று
அப்போதே மலர்ந்தது
காதலை கருக்கிவிட்டதாய்
சாதியை காத்துக்கொண்டதாய்
இறுமாந்து எக்காளமிட்ட வெறியே
இப்போது வந்து பார்…

நீங்கள் கொய்த பூவொன்று
புயலாகி நிற்பதைப் பார் – உன்
ஆணவம் அடியோடு சரியுது பார்
கடும் புனலாய் மாறி நிற்கும்
எங்கள் தோழி கவுசல்யாவைப் பார்!

காதலை வெட்டும் கத்திகள்- இன்னும்
கண்டுபிடிக்கவில்லை ஆணவமே!

Surya

Leave A Reply

%d bloggers like this: