கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக வந்து செல்லும் இடமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்படுகிறது. கோவையில் மக்கள் ஒற்றுமைக்காகவும், மதநல்லிணக்கத்திற்காகவும், தொடர்ந்து அயராது பாடுபட்டு வரும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மதவெறி சக்திகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி கோவையின் தொழில் அமைதி மற்றும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், கலவரம் ஏற்படும் சூழலை தடுக்கவும் உடனடியாக மக்களை திரட்டி போராட்டக்களம் கண்டு வருகிற இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது.

நாடு முழுவதும் அமைதிக்கு குரல் கொடுக்கும் கட்சியாக சிபிஎம் இருப்பதால் இந்துத்துவா மதவெறி அமைப்புகள் தங்களின் சகிப்பின்மயின் காரணமாக மார்க்சிஸ்ட்  கட்சியின் ஊழியர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகவே கோவையில்  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுப்பதாகவே கருதுகிறோம். இந்துத்துவா மதவெறி சக்திகளின் இம்மாதிரியான மிரட்டல்களுக்கு உழைப்பாளி மக்களும் மார்க்சிஸ்ட் கட்சியும் என்றும் அஞ்சியது இல்லை. மேலும்,மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த தொடர்ந்து செயல்படுவோம் என மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையைல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடுர சம்பவத்தை கண்டித்து. சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு ஜனநாயக சக்திகளும், அமைப்புகளும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் 17.6.2017 (இன்று) மாலை 5 மணிக்கு சிவானந்த காலனி பவர்ஹவுஸ் அருகில் நடைபெறும் என கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த குண்டுவீச்சு தொடர்பாக காவல் துணை ஆணையர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரண மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply