சண்டிகர்: அரியானாவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை அங்குள்ள பெண்கள் அடித்து உதைத்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அரியானா மாநிலம் குருகிராம் என்ற இடத்தில் ஞாயிறன்று இரவு சாலையில் சென்ற பெண்களை இளைஞர் ஒருவர் குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து போதை இளைஞரை அடித்து உதைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போதை இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply