கரூர்: கரூரில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரை சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவரை கடந்த 20 நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திங்களன்று கரூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.