சென்னை,
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரில் வசிப்பவர் மேகநாதன் (65). இவரது மகன் உதயகுமார் (35). இவர் கொடுங்கையூர் திருவொற் றியூர் நெடுஞ்சாலையில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வெளியிடங்களில் இருந்து பேரல்களில் கொண்டு வரப்படும் கெமிக்கலை தரம் பிரித்து ஆசிட், சோப் ஆயில், ஆலா உள்ளிட் டவை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிறுவனத்தில் 6 பேர் வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை தந்தையும், மகனும் நிறுவனத்திற்கு வந்து விட்டு இரவில் வீட்டிற்கு சென்றனர். இரவு பணியில் வியாசர்பாடி யைச் சேர்ந்த ஜெகதீஷ் (31), நாகராஜ் (52), ஸ்ரீதர் (23) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏ.சி. அறையில் இருந்து மின்சார கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. சிறிது நேரத்தில் நிறுவனம் முழுவதும் பரவியது. இதில் 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த 3 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: