புவனேஸ்வர்,
ஒடிசாவில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் ஜகத்சிங்பூர் மச்சாகான் அருகே சாண்டோல் பகுதியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: