சிவகங்கை,
மானாமதுரை அருகே வணிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வணிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலதி (22) என்பவர் பிரசவத்திற்காக அனுமத்திக்கப்பட்டார். மருத்துவர் இல்லாததால் செவிலியரும், துப்புரவு தொழிலாளர்களும் மாலதிக்கு பிரசவம் பார்த்தனர். குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் மாலதி உயிரிழந்ததை அடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்று மாலதியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாலதியின் பெற்றோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மாலதியின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாலதியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: