அருமனை;
குமரி மாவட்டம், அருமனை அருகே மேல்புறத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் கல்வீசி தாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களியல் வட்டாரக்குழு அலுவலகத்தையும், வாலிபர் சங்க தியாகிகள் நினைவு ஸ்தூபியையும் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று  நேரில் பார்வையிட்டார்.
மேல்புறத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:                                                                               மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாமல் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்களை பாஜக , மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்பிவிடுகிறது.
இந்த அமைப்பினர் சிபிஎம் தலைவர்களை மிரட்டுகின்றனர். இவர்களுக்கு தீனி போட்டு வளர்க்கிறது பாஜக. புதுதில்லியில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சித்தது கண்டிக்கத்தக்கது.
]மத்திய பாஜக அரசானது மக்களுக்கு எதையும் செய்யவில்லை. தேர்தல் காலத்தில் இவர்கள் அளித்த வாக்குறுதியும் காற்றில் பறந்து போனது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் எனன்று கூறினார்கள்.
ஆனால் ஒன்றரை லட்சம் பேருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை. இந்நிலையில் மக்களுக்கு எதிரான எல்லாவித திட்டங்களையும், வெளிநாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது. தற்போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் தலையிடுகிறது.
பாஜகவினர் ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மக்களின் போராட்டங்களை நசுக்க நினைக்கிறது, மத்திய அரசு. கலவரங்களை உருவாக்க முயற்சிக்கின்ற ஆர்.எஸ்.எஸ். பாஜக ,சங் பரிவார அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேல்புறத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களையும் வாலிபர் சங்க ஸ்தூபியை உடைத்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.