நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி, கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கிறது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி. புதனன்று (ஜூன் 7) அரங்கேற்றப்பட்ட அந்தத் திட்டமிட்ட நடவடிக்கையின்மூலம் ஆர்எஸ்எஸ் கூடாரம் கூற முயலும் செய்தி, ‘நாங்கள் எந்த அளவுக்கும் போகத் தயங்கமாட்டோம்,’ என்பதுதான்.
கட்சியின் அரசியல்தலைமைக்குழு கூட்டத்தை முடித்து, செய்தியாளர்களைச் சந்தித்து கூட்ட முடிவுகள் பற்றி விளக்குவதற்காக அவர் சென்றபோது, செய்தியாளர்களோடு கலந்து நின்ற இருவர் திடீரென கோஷங்கள் எழுப்பி அவரைத் தாக்க முயன்றனர். எப்போதும் போல் இப்போதும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக சம்பந்தப்படவில்லை என்றுசொல்லிக்கொண்டிருக்க, பாரதிய இந்து சேனா என்றஅமைப்பைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள்.
எதையும் நேருக்கு நேர் நின்று மேற்கொள்கிற அறத்துணிவு இவர்களிடம் இல்லாததையே இப்படிப்பட்ட புனைப்பெயர் அமைப்புகளும் செய்தியாளர் வேடத்தில் புகுந்த செயலும் காட்டுகின்றன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பீப்பிள்ஸ்டெமாக்ரசி’ ஏட்டின் தலையங்கத்தில், காஷ்மீரில்ஒரு ராணுவ அதிகாரி தனது ஜீப்பின் முன்புறத்தில்ஒரு இளைஞரைக் கட்டிவைத்து, கல்வீச்சுப் போராட்டம் நடத்திக்கொண்டிருப்போர் முன்பாகஓட்டிச் சென்றதையும், அந்த அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கான அங்கீகாரம் போல்அவருக்கு ராணுவ விருது வழங்கப்படுவதையும் விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. இப்படி விமர்சிக்கிறவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்று யெச்சூரியைத் தாக்க அனுப்பப்பட்டவர்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள்.
முன்பு, பாகிஸ்தானுடனான அரசுவுறவை இந்தியாதுண்டித்துக்கொள்ள வேண்டும் என்று ரகளை செய்த கும்பல் இது. சென்ற ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வெற்றிபெற சிறப்பு பூஜை நடத்தியவர்கள் இவர்கள்! தில்லியின் கேரள பவன் இல்லத்தில் மாட்டிறைச்சி விநியோகிக்கப்படுவதாகப் புரளி கிளப்பி மோதலை ஏற்படுத்தத் திட்டமிட்டதும் இவர்களேதான்.இப்படி சங் பரிவார அரசியலோடு இருக்கிற இவர்களது அட்டூழியங்களை ஆர்எஸ்எஸ் பீடமோ, பாஜக தலைமையோ கண்டித்ததில்லை. எதைப்பற்றியெல்லாமோ ‘டுவிட்டர்’ மூலம் கருத்துக்கூறுகிற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தச் செய்தி போய்ச்சேரவில்லை போலும்; நாடாளுமன்ற மாநிலங்களவையின் ஒரு முக்கிய உறுப்பினர் மீதான தாக்குதலை அவரும்கண்டிக்க முன்வரவில்லை.
ஆனாலும் இவர்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று நம்பச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இக்கூட்டத்தின்செயலுக்குஉள்ள நோக்கம் இரண்டு.முதலாவது நோக்கம், தலைவரையே தாக்கத்தயங்கமாட்டோம் என்று காட்டி,மற்ற அனைவரையும் வாயடைக்கச் செய்வது.ஆனால், மோடிஅரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச்சொல்கிற பணியை கம்யூனிஸ்ட்டுகள்ஒருபோதும் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.இரண்டாவது நோக்கம், நாடு முழுவதும் மதவெறிசார்ந்த அரசியல் பதற்ற நிலை தணியாமல் வைத்திருப்பது. இவர்களது திசைதிருப்பல் உத்திகளை அம்பலப்படுத்தும் மதச்சார்பற்ற சக்திகள் அதை அனுமதிக்கப்போவதில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.