திருவாரூர்;
தலைநகர் தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ். ரவுடிகள் சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சித்தினர்.அவர்களைத் தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
        திருவாரூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் தலைமையேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ரெங்கசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ஆர் சாமியப்பன், பி.மாதவன், டி.முருகைய்யன், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.வடுகநாதன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.பிரகாஷ், மாதர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் பா.கோமதி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரளம்
நன்னிலம் வட்டம் பேரளம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமையேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் கண்டன உரையாற்றினார். மூத்த தலைவர் எஸ்.துரைசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் டி.மனோகரன் உட்படத் திரளானோர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசல் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.ஏஸ். மற்றும் பாஜக கயவர்களை கண்டித்து ஒன்றியச் செயலாளர் எப்.கெரக்கோரியா தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.ஜி.சேகர், கே.ராம்தாஸ், டி.ஏ.சரவணன், ஏஸ்.கிருஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே. கைலாசம் தலைமை வகித்தார். நகர்ச் செயலாளர் சி.டி. ஜோசப், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சோம ராஜமாணிக்கம், எஸ். நாகூரான், பி. அண்ணாதுரை, ஜான்கென்னடி உள்ளிட்ட 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் கண்டன உரையாற்றி முடித்து வைத்தார்.
மன்னார்குடி
பெரியார் சிலை முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நகர்ச் செயலாளர் டி. சந்திரா தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். தங்கராசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. தங்கவேலு, மன்னன்.மணி, நகர்க் குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி, எம். சிராஜுதீன், ரா.ராஜேஷ் ஆகியோர் உரையாற்றினர். முடிவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நா. பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.வி.கனகசுந்தரம், சி.செல்லதுரை, நா.ராஜ்மோகன், என்.ராஜேந்திரன், ஜி.துரைராஜ், நகர்ச் செயலாளர் ஏ.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் கே. பாலசுப்பிரமணியன் முடிவில் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாஜலம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அறிவழகன், பிச்சபிள்ளை, பல்கீஸ், பெரியசாமி, நாகரத்தினம், அனுசியா, ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் வி.பரமசிவம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஏ.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.மகாராஜன், இளவரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.என்.துரைராஜ், எஸ்.மீனா, பி.பத்மாவதி, ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 25 பெண்கள் உள்பட 85 பேர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று நகர்ச் செயலாளர் சுபாஷ்சந்திர போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நாகைமாலி, அமிர்தலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சீனி.மணி, எம்.சுப்பிரமணி, பி.டி.பகு, ஜி.முருகையன் மற்றும் நகர் குழு, ஒன்றியக் குழு, கிளை செயலாளர்கள் மற்றும் ஏராளமான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் கடைத்தெருவில் ஒன்றியச் செயலாளர் ஜி. ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.என். அம்பிகாபதி, எம்.என்.அபுபக்கர், வி.ச. ஒன்றியத் தலைவர் எம். செல்வராஜ். விதொச ஒன்றியச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ. சிவகுமார் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கீழையூர்
கீழையூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதன் ஒன்றியச் செயலாளர் எம். முருகையன் தலைமை ஏற்றார். அதில் சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் மற்றும் இடைக்கமிட்டி, கட்சி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி
பொறையாரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் காபிரியேல் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். வட்டக் குழு உறுப்பினர்கள் வெண்ணிலா, தமிழ்வாசகம், ஜெகதீசன், பொறையார் நகர் பொறுப்பாளர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி உழவர் சந்தை முன்பு வட்டச் செயலாளர் சி.வி.ஆர். ஜீவானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வட்டக் குழு உறுப்பினர்கள் கே.நாகையா, எஸ்.ராஜாராமன், எம்.கரிகாலன், என்.புஷ்பலதா, ஏ. நூர்ஜகான், எம்.கோவிந்தராஜ் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை  
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பெரி.குமாரவேல், ப.சண்முகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எஸ்.சங்கர், வி.துரைச்சந்திரன், ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் கே.தங்கவேல், சி.ஜீவானந்தம், க.சிவக்குமார், கே.முகமதலிஜின்னா, பி.வீராச்சாமி, எம்.சண்முகம், தென்றல் கருப்பையா, வே.வீரையா. வி.ரெத்தினவேல், ஏ.பாலசுப்பிரமணியன், எம்.ஆர்.சுப்பையா, டி.சலோமி, எல்.வடிவேல், துரை.நாராயணன், சுசீலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.செல்லதுரை, பி.ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டச்செயலாளர் எஸ்.டி.கே.ராஜாங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி எஸ்.அகஸ்டின், சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கருணாநிதி, ராஜகுமாரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

You must be logged in to post a comment.