போபால்,
மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் படுகொலையை கண்டித்து இடதுசாரிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையொட்டி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 1-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாயன்று விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சாலைகளின் மத்தியில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். மான்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இடதுசாரிகள் மத்திய பிரதேசத்தில் முழுஅடைப்பு போராட்டத்திலற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இணைந்து கண்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.