அகர்தலா;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி செல்வாக்குடன் இருக்கும், திரிபுராவில் எப்படியாவது கால்பதித்துவிட வேண்டுமென பாஜக துடித்து வருகிறது.

இதற்காக எந்த அளவிற்கும் கீழிறங்க பாஜக தயாராகி விட்டது. இதன் முதற்கட்டமாக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்களை கூண்டோடு வளைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 6 எல்எல்ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிராக அரசியல் நடத்தும் தனது நோக்கங்களுக்காக மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 6 பேரையும் குதிரைபேரம் நடத்தி திரிணாமூல் காங்கிரசுக்கு தாவ வைத்தார். தற்போது அந்த 6 பேரையும் பாஜக-வுக்குள் இழுத்துப் போடும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: