பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.கர்நாடக மாநிலம் பெல்கா மாவட்டம் ராம்துர்க் தாலுகாவைச் சேர்ந்த கடக்கிடுடா கிராமத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். மழை காரணமாக அணவலா-யாதகிரி சாலையில் உள்ள ஒரு ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தை கவனிக்காமல் தரை பாலத்தில் வந்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் வந்த ஹொளிபசப்பா (55), யமனப்பா (45), அசோக சிவபுத்திரப்பா (40), ருத்திரப்பா (55) ஆகிய 4 பேர் பலியானார்கள்.

காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பசவலிங்கப்பா உயிர் தப்பினார். இதுகுறித்து கெரூரா காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: