5 mins ·

முகத்தில் விரல்களை மூடி
ஒன்று, இரண்டு, மூன்றென
குழந்தை எண்ணத் துவங்கும் அழகில்
மறைந்து கொள்ள மறந்து விடுகிறோம்.
குழந்தைகளிடம்
அகப்பட்டுக் கிடக்கவாவது
அவர்களுக்குப் பிடித்த
பூனையென மாறி விடலாம்..
– ப.கவிதா குமார்

Leave A Reply

%d bloggers like this: