கவுகாத்தி ,

மோடி தலைமையிலான பாஜக அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயாவில் உள்ள பாஜக தலைவர் ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பச்சு மாரக் பாஜகவில்  இருந்து விலகியிருக்கிறார்.

மேகாலயாவில் பெரும் அளவு கிரிஸ்துவ மக்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலத்தின் மூன்று முக்கிய பழங்குடியினரான காசிஸ் , கரோஸ் மற்றும் ஜெயிண்டியால் இன மக்களுக்கு மாட்டிறைச்சி உண்பது பொதுவான வழக்கம்.

மெகலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2018 ஆம் ஆண்டு மேகாலயாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மக்களுக்குக் குறைந்த விலையில் மாட்டிறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் பெர்னார்டு மாரக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குறுதியளித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியை முன்னிட்டு , மேகாலயாவில் சில பாஜக தலைவர்களால் மாட்டிறைச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக மத்தியில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து , மேகாலய மாநிலத்தின் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பெர்னார்டு பாஜக கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பச்சு மாரக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

பாஜக தலைமையிலான ஆட்சியின் மூன்றாண்டு நிறைவு பெற்றதை அடுத்து பச்சு மாரக் , விழா ஒன்றை நடந்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் , விழாவில் ரைஸ் பீர் மற்றும் மாட்டிறைச்சி வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு கட்சி தலைமையில் இருந்து கண்டம் எழுந்தது.

இதனையடுத்து பச்சு மாரக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். மேகாலயா பாஜக தலைவர் சின்புன் லிங்க்தோவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இது குறித்து பச்சு மாரக் கூறும் போது , மாட்டிறைச்சி உண்பது எங்களது கலாச்சாரம் , பாரம்பரியம். எங்கள் காரோ இன மக்களின் உணர்வை பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது. பாஜக இந்துத்துவா கொள்கைகளை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: