லண்டன்;
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மீது உருவான எதிர்பார்ப்புகள் அனைத்தும் வெறும் பேச்சில் முடிந்து விட்டன என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி மன்னனுமான ஷாகித் அப்ரிடி ஐசிசி       இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியா வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட நிலையில் அதிரடி தன்மையுடன் கடைசி வரை விளையாடியது.இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து நின்றுவிட்டனர், தொடர்ந்து கோஹ்லி, யுவராஜ் சிங்கும் அதிரடி காட்டினர்.
டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனும் சர்ப்ராஸ் அகமது ஏன் பந்து வீச்சை தேர்வு செய்தார்? என்ன திட்டமிட்டார்?என இறுதி வரை புரியவில்லை.
பாகிஸ்தான் பீல்டிங்கும் படுமோசமாகவே இருந்தது,எளிய கேட்சுகளை தவறவிட்டனர்.
இந்தியா 319 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் 164 ஓட்டங்களில் சுருண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என அப்ரிடிதெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.