டெராடூன் ,

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய வான் எல்லைக்குள் சீனாவின் ஹெலிகாப்டர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான சாமோலியில் , பரஹோட்டி என்ற கிராமத்தின் மேலே சீன ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் இந்திய வான் எல்லைக்குள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து உடனடியாக சீன ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல் குறித்து அந்நாட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்தி பட் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: