கோவை,
கோவையில் 4 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது.
கோவையில் இன்று காலை ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை 12 வயது சிறுமி உட்பட 4 பேரை கொலை செய்தது. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி காட்டு யானையை வனத்துறையினர் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிடிபட்ட யானையை லாரியில் ஏற்றி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: