கவுகாத்தி ,

மோடி தலைமையிலான பாஜக அரசு  கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயாவில் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பெர்னார்டு மாரக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மேகாலயாவில் பெரும் அளவு கிறிஸ்துவ மக்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலத்தின் மூன்று முக்கிய பழங்குடியினரான காசிஸ் , கரோஸ் மற்றும் ஜெயிண்டியால் இன மக்கள் மாட்டிறைச்சி உண்பது பொதுவான வழக்கம். மெகலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2018 ஆம் ஆண்டு மேகாலயாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மக்களுக்குக் குறைந்த விலையில் மாட்டிறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பெர்னார்டு மாரக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குறுதியளித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியை முன்னிட்டு , மேகாலயாவில் சில பாஜக தலைவர்களால் ஜூன் இரண்டாவது வாரத்தில் மாட்டிறைச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து , மேகாலய மாநிலத்தின் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பெர்னார்டு மாரக் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வடக்கு காரோ மலைப்பகுதியின் பாஜக தலைவர் பாச்சு சி மாரக்கும் , மாட்டிறைச்சி திருவிழாவிற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

இது குறித்து பெர்னார்டு மாரக் , பாஜக அவர்களது சித்தாந்தத்தை எங்கள் மீது திணிக்க முயலுகிறார்கள். எங்களது பாரம்பரிய முறைப்படி மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதில் என்ன தப்பு ? காரோ மலைப்பகுதியில் பாஜக படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது. ஆனால் தற்போது , பாஜகவின் இந்துத்துவா கொள்கை திணிப்பை எதிர்த்து  பலர் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர்.

பாஜக-வில் இருந்து விலகிய பெர்னார்டு மாரக் , வருகின்ற 2018 சட்டசபை தேர்தலில் தெற்கு துரா தொகுதியில், சுயச்சை வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.