சண்டிகர்: இந்தியாவின் மிக பழமைவாய்ந்த ரயிலுக்கு வியாழனன்று 105வது பிறந்த நாளை கொண்டாடுகின்றது.

இந்தியாவின் மிகப்பழமையான ரயில் என பஞ்சாப் மெயிலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் கடந்த 1912-ஆம் ஆண்டு தன் முதல் பயணத்தைத் 6 பெட்டிகள் கொண்டு மும்பை-பெஷாவர் இடையே துவங்கியது. முன்னதாக தொடக்கத்தில் இந்த ரயில் ஆங்கிலேயர்களுக்கும், பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்பட்டது.  6 பயணிகள் மட்டுமே பயணிக்க முடிந்த இந்த நீராவி ரயிலில், பின்னர் கூடுதல் வசதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தது.  ‘தி பஞ்சாப் லிமிடெட்’ நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வந்த பஞ்சாப் மெயில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘ஃப்ரான்டியர் மெயில்’ ரயிலைவிட 16 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த ரயிலின் மிகச்சரியான பிறந்த தினம் தெரியாதபோதும் 1912-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பயணி ஒருவர் ரயில் தாமதமாக வந்ததென புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகார் குறிப்பினை வைத்தே பஞ்சாப் மெயிலின் பிறந்த தேதி கணக்கிடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.