கோவை: படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி வந்த நடிகை அனுஷ்காவின் கேரவனை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷகா. இவர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை அடுத்துள்ள பொள்ளாச்சியில் நடைபெற்று வருகின்றது.    படப்பிடிப்பின் போது அனுஷ்கா பயன்படுத்தி வந்த  கேரவன் , பொள்ளாச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கு,சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் , கேரவனை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் கேரவனுக்கு முறையான வரி செலுத்தாததும் , உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து  கேரவனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் உரிமையாளர் இளங்கோவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: