சென்னை;
இலங்கையில் நடந்த யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை சென்னை மெரீனாவில் தடையை மீறி நடத்தியதையொட்டி, ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.

இந்நிலையில், இந்த 17 பேரின் சிறைக்காவலை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: