மும்பை;
காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கின் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் பந்த்ரா புறநகரில் உள்ள குடிசை பகுதிகளை மறுசீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்ட சித்திக்கும், அவருடன் சேர்ந்த சிலரும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் பாபா சித்திக் உள்ளிட்டோர் மீது பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் வழககு பதிவு செய்த அமலாக்கத்துறையினர், சித்திக்கின் நிறுவனங்கள் உள்பட குறைந்தது 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: