மதுரை,
மாட்டிறைச்சி வேண்டும் என்று போராட்டம் நடத்துவபவர்கள்   நாய்க்கறி திண்ணும் போராட்டம் நடத்துங்க என்று பாஜகவின்  எச்.ராஜா  தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக வெட்ட தடைவிதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும்,  பாஜகவின் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மத்திய அரசின்  நடவடிக்கைக்கு எதிராகவும்  திராவிட விடுதலைக்கழக தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஞாயிறன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மாட்டுகறி திண்ணும் போராட்டம் நடத்துபவர்கள் நாய்க்கறி திண்ணும் போராட்டம் நடத்துங்கள் என்று அதிகார திமிரோடு பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: