தீக்கதிர்

மணிப்பூர் முதல்வர் மகனுக்கு 5 ஆண்டு சிறை – உச்சநீதிமன்றம்

இம்பால்,
சாலை விபத்து வழக்கில் மணிப்பூர் முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி, பெண் ஒருவர் மீது அஜய் மோதி உள்ளார். இந்த விபத்தில் அப்பெண் உயிரிழந்தார். இதையடுத்து அடுத்து, அவரின் மகள் தொடர்ந்த வழக்கில் மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கின் மகன் அஜய் மீட்டாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.