நீலகிரி ,

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் எஸ்டேட்டில் உள்ள கேட் எண் 10-ல் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி திருச்சூரை சேர்ந்த சதீசன் , திபு , சந்தோஷ் , உதயகுமார் , ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி , மனோஜ் சமி , வாளயார் மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடைசி குற்றவாளியான கேரளா திருச்சூரை சேர்ந்த ஜிஜின் என்பரை காவலர்கள் திங்களன்று கைது செய்தனர். அவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.