பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் வர்தூர் ஏரியிலிருந்து நச்சு நுரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரு அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வெளியாகும் கழிவு நீர் சாக்கடைகள் மூலம் வர்தூர் ஏரியில் கலக்கிறது.
இந்த ஏரியில் கழிவுநீரின் அளவு அதிகரிக்கும்போதெல்லாம், தண்ணீரில் ஆங்காங்கே உருவாகும் நுரை, மலைபோல குவிந்துவிடும். அந்த நுரை, அருகிலுள்ள சாலைகளில் பறக்கும். இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கழிவுநீர் அதிகரிப்பால் இன்றும் சாலைகளில் நுரை பறக்க துவங்கியது.  இந்த நுரையில் உடலைப் பாதிக்கும் நச்சுகள் கலந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: