சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரின் முன்னாள் சமையல்காரர் ஒருவர் , மணல் அள்ளும் ஏலத்தில் ரூ.26 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாம் மாநிலம் , மொராதாபாத் மாவட்டம் பில்லேரி பகுதியை சேர்ந்தவர் அமித் பகதூர் (36). இவர் அம்மாநிலத்தில் மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரானா குர்ஜித்தின் நிறுவனத்தில் மாதம் ரூ.11,706 சம்பளத்தில் சமையல்காரராக வேலை பார்த்தவர். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதிப்படி அமித் பகதூரின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி கணக்கில் ரூ.4,840 மட்டுமே இருப்பு உள்ளது. இந்நிலையில் மே 19 ஆம் தேதி நவான்ஷார் , சையித்பூர் குர்த் பகுதியில் மணல் அள்ளுவதற்காக அம்மாநில அரசு ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் வென்றவர் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒப்பந்த தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ரூ.26.51 கோடி மதிப்பிலான இந்த ஏல ஒப்பந்தத்தை கைப்பற்றிய பகதூர் , விதிமுறைப்படி மே 21 தேதி முதல் தவணையாக ரூ.13.34 கோடி செலுத்தியுள்ளார்.

பகதூரின் வங்கி கணக்கு படி கடந்த ஒரு வருடமாக ரூ.18,000 முதல் ரூ. 22, 000 வரை மட்டுமே பணபறிமாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில் , மே 19 ஆம் தேதி ரூ.26.51 கோடி மதிப்பிலான ஏலத்தை கைப்பற்றியதுடன் , முதல் தவணையாக ரூ.13.34 கோடி செலுத்தியுள்ளார்..

இது தொடர்பாக சக்கரை ஆலை  அதிபர் , ரூ.ரூ.169 கோடி மதிப்புடைய சொத்துகள் உள்ள   அமைச்சரருமான  ரானா குர்ஜித் , இந்த ஏல விவகாரத்தில் தனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ,எந்த தொடர்பும் இல்லை . பகதூர் ஏலம் எடுக்கும் சமயம் , அவர் எனது நிறுவனத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இவரை போல் ஆயிரம் ஊழியர்கள் எனது நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள் , அவர்கள் எனது நிறுவனத்தை விட்டு சென்ற பிறகு அவர்கள் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பல்ல என தெரிவித்துள்ளார்.

ஏலம் நடக்கும் ஒரு மாதம் முன்னதாக பாகதுரை, குர்ஜித் வேலைவிட சொல்லிவிட்டார். மாதம் ரூ.11,000 சம்பளம் வாங்கும் ஒருவர் எவ்வாறு சுமார் ரூ.26 கோடி மதிப்புடைய ஏலத்தை கைப்பற்றி , முதல் கட்டமாக ரூ. 13 கோடி செலுத்த முடிகிறது என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை ஆளும் அமரீந்தர் சிங் அரசு 102 சுரங்க தளங்களை முற்போக்கான முறையால் ஏலம் விடுத்து ரூ.1,026 கோடி சம்பாதித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.