டெராடூன் ,

உத்தரகண்ட் மாநிலம் பாகீரதி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து சுற்றுல்லா சென்ற பேருந்து உத்தரகண்ட்டில் உள்ள பாகீரதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக உத்தர காசி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் ஸ்ரீவஸ்தவ் கூறுகையில் , மத்திய பிரதேசத்தை சேர்ந்த பேருந்து ஒன்று இமாலய மலையில் உள்ள கங்கோத்ரி மலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது நாலுபானி என்ற இடத்தை கடக்கும் போது சாலையில் இருந்து விலகி 300 மீட்டர் கீழ் உள்ள பாகீரதி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 21 பயணிகள் பலியாகினர். மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தோ – திபெத் காவலர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலானோர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர்கள் என்றார்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.