மும்பை:
இந்தியாவிலேயே நவீன வசதிகளுடன் அதிவேகத்துடன் இயக்கக்கூடிய முதல் சொகுசு ரயில் தேஜாஸ் ரயில் மும்பையில் இருந்து கோவா மாநிலம் கர்மாலி வரை இயக்கப்படுகிறது.

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணத்தை விட 20% அதிகம் என்றாலும் இருக்கை வசதி, வைஃபை, எல்இடி தொலைக்காட்சி என நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தேஜாஸ் ரயிலின் வேகம் தற்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த வார இறுதிக்குள் 200 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேஜாஸ் ரயிலில் செல்வது விமானத்தில் பறப்பது போன்று உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மஞ்சள் வண்ணத்தில் ஜொலிக்கும் சொகுசு ரயிலில் செல்வது தனி அனுபவம் என்கின்றனர் பயணிகள்.

Leave A Reply

%d bloggers like this: