சிவகங்கை: காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மானகிரி கிராமம் அருகே திங்களன்று இரண்டு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடதிலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 வயது குழந்தை உட்பட இருவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.