டெராடூன் ,

உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்தின் மீது பாறை விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா என்ற இடத்தில் பேருந்தின் மீது பாறை  விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.