சென்னை;
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.4 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.8 விழுக்காடு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 1557 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30 வரை நடைபெற்றது. பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 மாணவர்களும், தனித் தேர்வர்களாக 43 ஆயிரத்து 812 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 909 பேர் தேர்வெழுதினர். இவர்களில் ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். இவர்களுக்கான தேர்வு முடிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளியன்று (மே 19) வெளியிட்டது.
இதன்படி தேர்வெதியவர்களின் 94.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவிகளில் 96.2 விழுக்காட்டினரும், மாணவர்களில் 92.5 விழுக்காட்டினரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 3.7 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

100க்கு 100 மதிப்பெண்;
92 ஆயிரத்து 424 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 69 பேரும், கணிதத்தில் 13 ஆயிரத்து 759 பேரும், அறிவியலில் 17 ஆயிரத்து 481 பேரும், சமூக அறிவியலில் 61 ஆயிரத்து, 115 பேரும் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

100 விழுக்காடு தேர்ச்சி;
இந்த பொதுத்தேர்வில் பங்கேற்ற 12 ஆயிரத்து 188 பள்ளிகளில் 5 ஆயிரத்து 59 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1557 என்பது குறிப்பிடத்தக்கது.

பாடவாரியாக கணக்கிட்டால் அதிகளவாக சமூக அறிவியலில் 98.38 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மிகக்குறைவாக தமிழில் 96.75 மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண்;
இத்தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,613 (3.93 விழுக்காடு) பேரும்,451 லிருநது 480க்குள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 757 (12.50விழுக்காடு) பேரும், 246லிருந்து 450வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 831 (11.59 விழுக்காடு) பேரும் பெற்றுள்ளனர்.

401லிருந்து 425க்குள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 266 (11.33 விழுக்காடு) பேரும், 301 லிருந்து 400க்குள் 3 லட்சத்து 66 ஆயிரத்து 948 (37.36விழுக்காடு) பேரும், 201 லிருந்து 300க்குள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 336 (19.58 விழுக்காடு) பேரும் பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் விருதுநகர்;
தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் (98.55 விழுக்காடு) முதலிடத்திலும், கடலூர் மாவட்டம் (88.74) 33வது இடத்திலும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள்;
மாற்றுத்திறனாளிகளில் 3,983 பேர் தேர்வெழுதி 3,515 பேர் (89.39 விழுக்காட்டினர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வையற்றோரில் 97.81 விழுக்காட்டினரும், காது கேளாத, வாய் பேச முடியாதவர்களில் 81.63 விழுக்காட்டினரும், உடல் ஊனமுற்றோரில் 90.51 விழுக்காட்டினரும், இதர பிரிவில் 88.11 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகள்;
5463 அரசுப் பள்ளிகளை மட்டும் மாவட்ட வாரியாக ஒப்பிட்டால், கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 97 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களில் 84 விழுக்காடு என்ற அளவில் தேர்ச்சி உள்ளது.

பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்;
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12 ஆயிரத்து 199 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதினர். அந்தப் பள்ளிகளின் வகைகளும், அவற்றின் தேர்ச்சி விகிதமும் வருமாறு:

பள்ளிகள் விழுக்காடு;
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 86.77
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.90
கன்டோன்மெண்ட் பள்ளிகள் 87.31
மாநகாட்சி பள்ளிகள் 93.52
வனத்துறை பள்ளிகள் 93.27
முழு அரசு உதவிபெறும்பள்ளிகள் 94.26
அரசுப் பள்ளிகள் 91.59
அறநிலையத்துறை பள்ளிகள் 92.76
கள்ளர் பள்ளிகள் 94.70
நகராட்சி பள்ளிகள் 91.74
ஓரியண்டல் பள்ளிகள் 95.53
பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகள் 95.62
ரயில்வே பள்ளிகள் 95.54
தனியார் பள்ளிகள் 98.12
சோசியல் டிபென்ஸ் பள்ளிகள் 74.36
சமூக நலத்துறை பள்ளிகள் 86.26
மலைவாழ் நலத்துறை பள்ளிகள் 79.38

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்;
 விருதுநகர் 98.55
 கன்னியாகுமரி 98.17
 ராமநாதபுரம் 98.16
 ஈரோடு 97.97
 தூத்துக்குடி 97.16
 தேனி 97.10
 திருப்பூர் 97.06
 சிவகங்கை 97.02
 திருச்சி 96.98
 நாமக்கல் 96.54
 திருநெல்வேலி 96.53
 கோயம்புத்தூர் 96.42
 தஞ்சாவூர் 95.21
 கரூர் 95.20
 புதுக்கோட்டை 96.16
 ஊட்டி 95.09
 பெரம்பலூர் 94.98
 மதுரை 94.63
 திண்டுக்கல் 94.44
 தருமபுரி 94.25
 சேலம் 94.07
 சென்னை 93.86
 காஞ்சிபுரம் 93.51
 அரியலூர் 93.33
 கிருஷ்ணகிரி 93.12
 தி.மலை 92.16
 திருவாரூர் 91.97
 விழுப்புரம் 91.81
 திருவள்ளூர் 91.65
 நாகப்பட்டினம் 91.40
 வேலூர் 88.91
 கடலூர் 88.74
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் இருபாலர் பள்ளிகள்
மாணவர், மாணவியருக்கு தனித்தனிப் பள்ளிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் கவன சிதைவு ஏற்படாது என்று சாதிய சக்திகள் பகட்டு வார்த்தை பேசி மக்களை திசை திருப்புகின்றன.

இதற்கு மாறாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் போன்றே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் ஆதிக்க சாதிய சக்திகளின் பொய் பிரச்சாரத்தை தகர்த்துள்ளன.

தமிழகத்தின் இதர மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், சாதிய ஆதிக்க சக்திகள் நிறைந்த மதுரை, தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஆண்கள், பெண்கள் பயிலும் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட இருபாலர் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஆண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் 93.47 என்றும், பெண்கள் தேர்ச்சி விகிதம் 94.66 என்றும் உள்ளது. அதேசமயம் இருபாலர் பள்ளியில் படித்த மாணவன், மாணவியரின் தேர்ச்சி விகிதம் முறையே 96.67, 98.25 என்றுள்ளது.
இதேபோன்று ராமநாதபுரத்தில் மாணவர்களின் விகிதம் 95.40 என்றும், மாணவிகளின் விகிதம் 97.77 என்றும் உள்ளது. அதுவே, இருபாலர் பள்ளிகளில் முறையே 97.69, 99.10 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது.

தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்கள்;
கடந்தாண்டு பொதுத் தேர்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது சென்னை, பெரம்பலூர், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியுள்ளன.

கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்திலிருந்த ஈரோடு மாவட்டம் இந்த ஆண்டு 4வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. 3வது இடத்திலிருந்த விருதுநகர் முதலிடத்திற்கு வந்துள்ளது. கடைசி இடத்திலிருந்த வேலூர் ஒருபடி முன்னேறி 32வது இடத்தை பிடித்துள்ளது.

Leave A Reply