லண்டன்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் குற்றச்சாட்டு மீதான வழக்கை கைவிடுவதாக சுவீடன் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தனது தூதரகத்தின் மூலம் அமெரிக்க எப்படியெல்லாம் உலக நாடுகளை உளவு பார்த்து வந்ததது. அதன் மூலம் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்தி அதில் ஆதாயம் அடைந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை தொடர்ந்து விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வந்தது. இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்த விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்க சி.ஐ.ஏ. பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. அந்த முயற்சி நிறைவேறவில்லை. இதனையெடுத்து சுவீடன் நாட்டில் உள்ள பெண் ஒருவருடன் ஜூலியன் அசாஞ்சே உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வில்லை என்ற புகார் கூறினர்.. இதனை பயன்படுத்தி சுவீடன் அரசு அசாஞ்சேவை கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைக்க திட்டமிட்டது. இந்நிலையில் 2012ம் ஆண்டு ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து ஈக்வடார் அரசு அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க மிரட்டியது. ஆனால் அதனை ஏற்க மறுத்து ஈக்வடாரின் முன்னாள் ஜனாதிபதி ரபெல்கொரியா லண்டனில் உள்ள ஈக்வாடர் தூதரகத்திலேயே அசாஞ்சேவை தங்க அனுமதித்தார்.
ஆனாலும் சுவீடன் அரசு ஜூலியன் அசாஞ்சே மீது மேலும் இரண்டு பாலியல் தொடர்பான வழக்குகளை பதிந்து நீதிமன்றத்திற்கு பிரச்சனையை கொண்டு சென்றது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மறுத்து வந்தார். இந்நிலையில் சுவீடனில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் குழுவினர் அசாஞ்சேவிற்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

Leave A Reply