அவிநாசி, மே 18-
அவிநாசி அருகே கோதபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பெண்புள்ளி மான் காயமடைந்தது. அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோதபாளையம், வலையபாளையம், வண்ணாற்றாங்கரை, கவுசிகா நதி உள்ளிட்ட பகுதிகள் 80 ஏக்கருக்கும்மேல் வனப்பகுதியாக உள்ளது. இங்கு மான், மயில், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காவும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் போது நாய்கள் துரத்தியும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் செவ்வாயன்று கோதபாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற பெண் புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காலில் பலத்த காயமேற்பட்டு துடித்தது. இதைப்பார்த்த பொதுமக்கள், மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால் நடை மருத்துவர் உள்ளிட்டோர் மானுக்கு சிகிச்சை அளித்தனர். பிறகு மானை அப்பகுதியில் பாதுகாப்பாக வைத்திருந்து குணமடைந்தவுடன் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply