புதுதில்லி;
யமுனை ஆறு மாசுபடுவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் தூய்மை செய்வது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. வெள்ளியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யமுனை ஆறு மற்றும் அதன் கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளி மலம் கழிக்கவும், கழிவுகளை கொட்டவும் தடை விதித்து நீதிபதி ஸ்வதந்தர் குமார் உத்தரவிட்டார்.

மீறுவோருக்கு ரூ. 5 ஆயிரம் அபராம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள தீர்ப்பாயம், யமுனை ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சி நிர்வாகங்களையும் அறிவுறுத்தியுள்ளது

Leave A Reply