மதவாதி: சமூக-சமய சீர்திருத்தத்தில் சங்பரிவாரத்திற்கு அக்கறை இல்லை என்கிறாய். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள்தானே தீவிரமாகக் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
மார்க்சியர்: இது விஷயத்தில் பிறமதங்கள் பற்றி பேசுவார்களே தவிர இந்து மதம் பற்றி பேச மாட்டார்கள். அதனால்தானே மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி கேட்டார் : “முத்தாலக் பற்றி பேசுகிறவர்கள் ஏன் அதுகூடச் சொல்லாமல் மனைவியை கைவிடுகிற சிலஇந்துக்களின் பழக்கம் பற்றி பேசுவதில்லை? ஏன் இந்து மதத்தில் உள்ள விதவைகள் பற்றி பேசுவதில்லை? ஏன் சட்டமன்றம் /நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசுவதில்லை?”
மதவாதி:அதானே. நியாயமான கேள்வி.
மார்க்சியர்: இந்துப்பெண்கள் உரிமையில் மட்டுமல்ல, பட்டியல் சாதியினர்/ பழங்குடியினர்/
பிற்படுத்தப்பட்டோர் உரிமையிலும் அவர்களுக்காக குரல் கொடுத்தது
இல்லை. சொல்லப்போனால் அந்த உரிமைக்குரல் எழுந்தபோதெல்லாம்
எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

மதவாதி: அப்படியா சொல்கிறாய், அதற்கான ஆதாரம் என்ன?
மார்க்சியர்: 1990ல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்தியஅரசுபணிகளில் இடஒதுக்கீடு தர வி பி சிங் அரசு முடிவெடுத்தபோது அதை எதிர்த்து மாணவர்களைத் தூண்டிவிட்டது ஆர்எஸ்எஸ். விஷயத்தை திசைதிருப்பி, ஆட்சியைக் கவிழ்க்க அயோத்தியை நோக்கி ரத யாத்திரை துவக்கினார் அத்வானி, கவிழ்த்தே விட்டார்.
மதவாதி: அட ஆமாம்.
மார்க்சியர்: இப்போதும்கூட பட்டியல்சாதியினர்மீது தீண்டாமை கொடுங்கரங்கள் நீளுகின்றன, அவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். அந்த சாதிவெறி ஆட்டத்திற்கு துணைநிற்கிறது சங் பரிவாரம். உ பி யில் ஒரு சாமியார் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு திவெறியர்கள் மேலும் துணிவு பெற்றவர்களாக அந்த மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.சாதிஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்கிறோம் கம்யூனிஸ்டுகள்.அதைஏற்று சட்டம் கொண்டுவரத் தயார் இல்லையே அவர்கள். கேட்டால் தாங்கள்தாம் இந்துக்களுக்காக இருக்கிறோம் என்கிறார்கள்.இந்த அடித்தட்டுமக்கள் இந்துக்கள் இல்லையா?
மதவாதி: நியாயமான கேள்விதான். இந்து சமூகசீர்திருத்தத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்து சமய சீர்திருத்தத்திற்குமா எதிராக இருக்கிறார்கள்?
மார்க்சியர்:  நிச்சயமாக. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பற்றி அவர்கள் பேசுவது உண்டா? சிதம்பரம் நடராஜர் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முடியவில்லையே, சில கோயில்களில் இந்துபெண்கள் நுழைய முடியவில்லையே அவற்றை எதிர்த்து குரல் கொடுத்தது உண்டா?
மதவாதி: நீ சொல்வதையெல்லாம் பார்த்தால் சங்பரிவாரத்தவர் சாதாரண இந்துக்க
ளுக்கும் எதிரானவர்கள் என்றல்லவா தெரிகிறது!

மார்க்சியர்: ஆம். அதுதான் உண்மையிலும் உண்மை.
(இன்னும் பேசுவார்கள்)

-Ramalingam Kathiresan
LikeShow more reactions

Comment

Leave a Reply

You must be logged in to post a comment.