சென்னை:

புகாரை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளரை இடைநீக்கம்  செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டியானா. இவர் கடந்த செவ்வாயன்று இரவு மதுரவாயல் பகுதியில் உள்ள 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கிறிஸ்டியானாவின் 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் கிழே விழுந்து படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றர். இந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ்டியானாவின் உறவினர்கள் திருவெற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜெயசந்திரன் என்பவர் இவர்களது புகாரை ஏற்க மறுத்ததோடு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிறிஸ்டியானாவின் குடும்பத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்னர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசந்திரனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களுடன் சுமுக உறவைக் கடைப்பிடிக்கத் தவறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர ஆணையர் காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply