ஸ்டாக்ஹோம் ,

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேனை விடுவித்து, ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டில், ஜூலியன் அசாஞ்சே மீது இரு ஸ்வீடன் நாட்டுப் பெண்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அசாஞ்சே மீது, ஸ்வீடன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்டிருந்த கைது ஆணையை நீக்குமாறு, ஸ்வீடன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அசாஞ்சே. ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.  இதனால், தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்த உத்தரவிடுவார்கள் என உணர்ந்த அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தப்பித்து வந்தார்.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், தன்னை ஸ்வீடன் அரசு அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் இறங்கும் என்பதால், தலைமறைவாகவே வாழ்ந்துவந்தார் ஜூலியன் அசாஞ்சே. தற்போது அவர், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, விசாரணையில் பங்குபெறுவது சாத்தியமில்லாததால், இந்த வழக்கைக் கைவிடுவதாக ஸ்வீடன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், 2020-க்கு முன்னர், ஜூலியன் அசாஞ்சே ஸ்வீடன் நாட்டிற்கு வந்தால் , இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்படும் என ஸ்வீடன் தெரிவித்துள்ளது.

Leave A Reply