புதுதில்லி;
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குப்தாவோடு சேர்த்து, கோர்பா, சாமாரியா ஆகிய நிலக்கரி துறையின் முன்னாள் அதிகாரிகள் 2 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ள சிபிஐ நீதிமன்றம் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் மே 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 8 வலுவான குற்றச்சாட்டுகள் சிபிஐ தரப்பில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் குப்தா மீது சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் முறைகேடாக நிலக்கரி உரிமம் பெற முயற்சித்ததாக கேஎஸ்எஸ்பிஎல் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளும் இந்த வழக்கில் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இந்த வழக்கில் தொடர்புடையவராக அறியப்பட்டிருந்த ஆடிட்டர் அமித் கோயலை விடுவித்தும், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.