நியூயார்க் ,

நியூயார்க்கில் இன்று காலை நடைபாதையில் சென்றவர்கள் மீது கார் மோதிய  விபத்தில்  பெண் ஒருவர் பலியானார்.

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகே இன்று காலை வேகமாக கார் ஓட்டி வந்த அமெரிக்கா கப்பல்படைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜாஸ் , நடைபாதையில் வந்தவர்கள் மீது கரை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய வீரரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இது ஒரு தீவிரவாத நடவடிக்கை போல் தெரியவில்லை என்றாலும், அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நியூயார்க் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply