சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வெப்ப காற்று நகரும். ஆந்திராவில் தொடர்ந்து வெப்பநிலை இயல்பை விட அதிக நிலையில் உள்ளது. எனவே கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, மேலும் உள்மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
இதேபோல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோரம் உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply