பனாஜி ,

கோவா மாநிலத்தில் ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

கோவா மாநிலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே போர்த்துகீசியர் கட்டிய பாலம் ஒன்று உள்ளது. வியாழனன்று மாலை இந்த பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற மீட்பு குழுவினர் முயன்று வந்த நிலையில் மீட்பு பணியை வேடிக்கை பார்க்க சுமார் 50 பேர் பாலத்தின் மீது கூடியுள்ளனர்.  அப்போது எடை தாங்காமல் பாலம் உடைந்து , அனைவரும் ஆற்றுக்குள் விழுந்து மாயமாகினர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் , ஆற்றில் விழுந்தவர்களில் 2 பேர் பலியாகினர். சுமார் 20 பேர் தாமாகவே நீந்தி தப்பித்துவிட்டனர். 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.