உடுமலை, மே 18-
உடுமலை அருகே குடிநீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அருகே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராகல்பாவி என்ற கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவையை திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டத்தின் கிழ் கள்ளிப்பாளையம் வழியாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதனன்று அதிகாரிகள் மீது புகார் செய்ய உடுமலை காவல்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், குடிநீர் பிரச்சனை தொடர்பாக உரியநடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாகவும், பிரச்சனையை புகார் மனுவாக தருமாறு கேட்டு கொண்டனர்.

இதையடுத்து புகார் மனு அளித்துவிட்டு அக்கிராம கலைந்து சென்றனர். இதுகுறித்து புகார் அளித்த மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு கடந்த ஆறு மாதமாக குடிநீர் வருவது இல்லை. ஆனால், எங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சரியாக குடிநீர் விநியோகிகப்படுகிறது. மிகவும் பராபட்சமாக எங்கள் ஊரை மட்டும் வேண்டுமென்றே அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள். அப்படி தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.

Leave A Reply