தில்லி ,

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் , அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது வெளிநாடுகளில் முதலீடு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த மோசடி புகார்கள் தொடர்பாக கடந்த மாதம் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வாசன் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்., மீடியா என்ற டிவி நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. இதை 4.62 கோடி ரூபாயாக குறைத்துக் காட்ட, 2007ல், உதவி செய்ததாகவும், அதற்காக ஆதாயம் பெற்றதாகவும், ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது.

இது குறித்து, கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து, கடந்த மே 16 ஆம் தேதி, சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும், 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  சோதனையை அடுத்து கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.