காங்கோ நாட்டில் 3000 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் மகலா என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்குள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்புவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறைச்சாலையில் இருந்து 50 கைதிகள் தப்பிவிட்டதாகவும், ஒரு காவல் அதிகாரி உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், வெள்ளியன்று வெளியான செய்தியில் சிறையில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாகவும் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தப்பிய ஓடிய கைதிகளில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொலை குற்றவாளிகளும் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கைதிகள் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

divi theme free download nulled

Leave A Reply