அவிநாசி, மே 18-
பெருமாநல்லூர் அருகே ஜம்பொன் சிலையை விற்பனைக்காக கொண்டு வந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் கைப்பையுடன் நின்றிருந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் ஆறரை கிலோ எடையுடன் ஒரு அடி உயரமுள்ள பத்ரகாளி ஜம்பொன் சிலை இருந்தது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் உதகை மூசாரிப் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (60) மற்றும் அவரது மகன் சுரேஷ் (32), அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (42) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்களது நண்பரான புதுக்கோட்டை மானுநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த ஒராண்டுக்கு முன்பு அப்பகுதியில் இந்த ஐம்பொன் சிலையைத் திருடி வந்து, இவர்களிடம் கொடுத்து வைத்ததாகவும், இப்போது இந்த ஐம்பொன் சிலையை விற்பனை செய்வதற்காக பெருமாநல்லூர் பகுதிக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஐம்பொன் சிலையை கைப்பற்றிய போலீசார் மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply