அரியலூர்,
பத்தாம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அரியலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள நாவலூர் காலனியைச் சேர்ந்த மாணவி கலைவாணி. இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையென தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: